உறவுகள் மேம்பட .....
குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க
1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
2.. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
5. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
11. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
13. மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள்.
14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள்.
15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.
16. பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
17. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Thursday, April 22, 2010
நட்பு
உன் நட்பை நேசித்தபின்
உன்னைப் பார்க்கும்போது
புன்னகை செய்யும்
என் இதழ்களை விட…
உன்னைக் காணாதபோது
கண்ணீர் சிந்தும்
என் கண்களையே
நேசிக்கிறேன்..........
உன்னைப் பார்க்கும்போது
புன்னகை செய்யும்
என் இதழ்களை விட…
உன்னைக் காணாதபோது
கண்ணீர் சிந்தும்
என் கண்களையே
நேசிக்கிறேன்..........
சில தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகளின் பேச்சுக்களில் விழுந்த நகைச்சுவை சிதறல்கள் உங்களுக்காக
சில தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகளின் பேச்சுக்களில் விழுந்த நகைச்சுவை சிதறல்கள் உங்களுக்காக.
இதுதான் மிரட்டல்
என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப மிரட்டினாங்க. அதனாலதான் நான் ரமேஷ மறந்துட்டு அவங்க சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சம்மதிச்சேன்.
அப்படி என்னதாண்டி மிரட்டினாங்க?
தொடர்ந்து ரமேஷ் கூட பழகினா அப்புறம் அவனையே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்னு மிரட்டினாங்க.
எளிமையான நிகழ்ச்சி
சம்மந்திகிட்ட நிச்சயதார்த்தத்தை எளிமையா செய்யணும்னு சொன்னது தப்பா போச்சு!
ஏன்?
தட்டு மாத்திணதும், எல்லோரும் அவங்கவங்க இஷ்டப்படி அவங்கவங்க வீட்ல போய் சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிட்டாரு.
நல்ல மனைவி
இப்படி உடம்பு முடியாம இருக்கும்போது, நகைகளை நிறைய போட்டிருக்கிற மாதிரி உன்ன படம் வரைஞ்சு பெரிசா மாட்டி வைக்கச் சொல்றியே, ஏன்?
எப்படியும் நான் செத்தப்பிறகு என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார். அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்கன்னு என் வீட்டுக்கார இம்ச பண்ணுவால்ல! அதுக்குத்தான்!!
என்னடா அவன் திருமணத்திற்கு அவசரப் படாதே அவசரப் படாதேன்னு சொல்லிக்கிட்டே இருக்கான்.
அப்படி என்னதான்டா சொல்றான்.
அவசரப்பட்டு திருமணம் செஞ்சிக்கிட்டா, ஏன்டா செஞ்சோம்னு நிதானமாக யோசிக்க வேண்டி வருமாம்.
***
யாரும் இருக்க மாட்டார்கள்
காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.
காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.
காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.
***
விளம்பரம்
கணவன் தேவை என விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண்.
"என் கணவனை எடுத்துக் கொள்" என நூறு கடிதம் வந்தது.
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!
காதலர்கள் கடற்கரையில்..
காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .
காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . . .
ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
இதுதான் மிரட்டல்
என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப மிரட்டினாங்க. அதனாலதான் நான் ரமேஷ மறந்துட்டு அவங்க சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சம்மதிச்சேன்.
அப்படி என்னதாண்டி மிரட்டினாங்க?
தொடர்ந்து ரமேஷ் கூட பழகினா அப்புறம் அவனையே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்னு மிரட்டினாங்க.
எளிமையான நிகழ்ச்சி
சம்மந்திகிட்ட நிச்சயதார்த்தத்தை எளிமையா செய்யணும்னு சொன்னது தப்பா போச்சு!
ஏன்?
தட்டு மாத்திணதும், எல்லோரும் அவங்கவங்க இஷ்டப்படி அவங்கவங்க வீட்ல போய் சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிட்டாரு.
நல்ல மனைவி
இப்படி உடம்பு முடியாம இருக்கும்போது, நகைகளை நிறைய போட்டிருக்கிற மாதிரி உன்ன படம் வரைஞ்சு பெரிசா மாட்டி வைக்கச் சொல்றியே, ஏன்?
எப்படியும் நான் செத்தப்பிறகு என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார். அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்கன்னு என் வீட்டுக்கார இம்ச பண்ணுவால்ல! அதுக்குத்தான்!!
என்னடா அவன் திருமணத்திற்கு அவசரப் படாதே அவசரப் படாதேன்னு சொல்லிக்கிட்டே இருக்கான்.
அப்படி என்னதான்டா சொல்றான்.
அவசரப்பட்டு திருமணம் செஞ்சிக்கிட்டா, ஏன்டா செஞ்சோம்னு நிதானமாக யோசிக்க வேண்டி வருமாம்.
***
யாரும் இருக்க மாட்டார்கள்
காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.
காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.
காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.
***
விளம்பரம்
கணவன் தேவை என விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண்.
"என் கணவனை எடுத்துக் கொள்" என நூறு கடிதம் வந்தது.
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!
காதலர்கள் கடற்கரையில்..
காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .
காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . . .
ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
தென்றலான காதல்
மலரென்று உனை எண்ணி மனதினில் வைத்திருந்தால்
பிரிவென்று வரும்போது பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்
கூடி இருக்கையிலே குளிர்நிலவாய்த்தானிருந்தாய்
பக்கம் இல்லாது பகலவனை மிஞ்சுகின்றாய்
கோடைகாலங்கள் இன்னல் பல தருகையிலே
வசந்தமாய் உன் நினைவு வந்து வந்து போகின்றது
காரிருள் என் மீது கவிழ்ந்து கிடக்கையிலே
விளக்காய் வெளிச்சம் தந்து வேறெங்கோ நீ
மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அது விறகாகிப் போயிருக்கும்
உன் நினைவு எப்போதும் எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி என் சுவாசம் நிறைந்திருக்கும்..........
பிரிவென்று வரும்போது பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்
கூடி இருக்கையிலே குளிர்நிலவாய்த்தானிருந்தாய்
பக்கம் இல்லாது பகலவனை மிஞ்சுகின்றாய்
கோடைகாலங்கள் இன்னல் பல தருகையிலே
வசந்தமாய் உன் நினைவு வந்து வந்து போகின்றது
காரிருள் என் மீது கவிழ்ந்து கிடக்கையிலே
விளக்காய் வெளிச்சம் தந்து வேறெங்கோ நீ
மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அது விறகாகிப் போயிருக்கும்
உன் நினைவு எப்போதும் எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி என் சுவாசம் நிறைந்திருக்கும்..........
வசந்தகால முடிவில் கேள்
இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது மரம்;
எள்ளி நகையாடினேன்,
'இப்படி எல்லாவற்றையும் உதிர்க்கிறாயே,
உனக்கு வெட்கமில்லையா?' என்று!
இறுமாப்புடன் மரம் பேசியது,
'என்னிடமிருந்து உதிரும் எதற்காகவும்
நான் வெட்கப்படுவதுமில்லை;
வருத்தப்படுவதுமில்லை!
கோடையிலும், கடும்பனிப் பொழிவிலும்
நீரெனக்குக் கிடைக்காதென்று
ஊருக்கு முன்னே உணர்ந்து
உதிர்க்கிறேன் என் இலைகளை!
மீண்டும் உதிப்பேன் பின்வரும் நாட்களில்!
இது, என்னை நானே தற்காக்கும் முயற்சி!
சாதாரண நாட்களில் கூட
சருகுகளை உதிர்ப்பேன்;
சத்தமின்றி நித்தம் துளிர்க்கும்
சிறுதளிர்கள் அவ்விடத்தில்!
இது, என் வாழ்க்கைச் சுழற்சி!'
'ஆ'வென வாய் பிளந்தேன்.
தொடர்ந்தது மரம்,
'இன்னும் கேள்!
உதிர்ப்பேன் என் மலர்களை......
அவை பூத்துக் குலுங்கிய
வசந்தத்தின் முடிவில்!
அதற்காக எனக்குக் கவலையில்லை;
ஏனெனில்,
பூ உதிர்ந்தால்தானே பிஞ்சு வெளிப்படும்!
இது, என் வாழ்க்கைத் தத்துவம்!'
'அப்படியா?' அதிசயித்தேன் நான்!
'அது மட்டுமன்று;
உதிர்ப்பேன் என் பிஞ்சுகளை!'
'என்ன, பிஞ்சுகளையுமா?'
'ஆம், வாழ்வின் நோக்கம் அறியாமல்
பிஞ்சிலே பழுத்த அந்த வெம்பல்களை
உதிர்க்கவே செய்வேன்;
இது, என் வளமான வாழ்வின் யுக்தி!'
'அவ்வளவுதானா?'
'இல்லை; இன்னும் முடியவில்லை; கேள்!
எள்ளி நகையாடினேன்,
'இப்படி எல்லாவற்றையும் உதிர்க்கிறாயே,
உனக்கு வெட்கமில்லையா?' என்று!
இறுமாப்புடன் மரம் பேசியது,
'என்னிடமிருந்து உதிரும் எதற்காகவும்
நான் வெட்கப்படுவதுமில்லை;
வருத்தப்படுவதுமில்லை!
கோடையிலும், கடும்பனிப் பொழிவிலும்
நீரெனக்குக் கிடைக்காதென்று
ஊருக்கு முன்னே உணர்ந்து
உதிர்க்கிறேன் என் இலைகளை!
மீண்டும் உதிப்பேன் பின்வரும் நாட்களில்!
இது, என்னை நானே தற்காக்கும் முயற்சி!
சாதாரண நாட்களில் கூட
சருகுகளை உதிர்ப்பேன்;
சத்தமின்றி நித்தம் துளிர்க்கும்
சிறுதளிர்கள் அவ்விடத்தில்!
இது, என் வாழ்க்கைச் சுழற்சி!'
'ஆ'வென வாய் பிளந்தேன்.
தொடர்ந்தது மரம்,
'இன்னும் கேள்!
உதிர்ப்பேன் என் மலர்களை......
அவை பூத்துக் குலுங்கிய
வசந்தத்தின் முடிவில்!
அதற்காக எனக்குக் கவலையில்லை;
ஏனெனில்,
பூ உதிர்ந்தால்தானே பிஞ்சு வெளிப்படும்!
இது, என் வாழ்க்கைத் தத்துவம்!'
'அப்படியா?' அதிசயித்தேன் நான்!
'அது மட்டுமன்று;
உதிர்ப்பேன் என் பிஞ்சுகளை!'
'என்ன, பிஞ்சுகளையுமா?'
'ஆம், வாழ்வின் நோக்கம் அறியாமல்
பிஞ்சிலே பழுத்த அந்த வெம்பல்களை
உதிர்க்கவே செய்வேன்;
இது, என் வளமான வாழ்வின் யுக்தி!'
'அவ்வளவுதானா?'
'இல்லை; இன்னும் முடியவில்லை; கேள்!
கண்டு கொண்டேன் காதல் அதுவென்று.....
கண்கள் மூடி
கனவுகள் தேடி
வளையல் குலுங்க
இடையினை வளைத்து
உதட்டின் பிளவில்
உயிரினை உறிஞ்சி
அவள் விரல்நகங்கள்
முதுகினில் வரய
மார்புகள் உரச
மயக்கம் கொண்டு
இளமை வேகத்தில்
இல்லற சுகத்தில்
காமம் மிகுந்து
காதல் அதுவென்றேன்...!
பின்...
வயதுகள் ஏறி
பிணிகள் கண்டு
தசைகள் சுருங்கி
கூடுகள் தெரிய
புழுக்கள் தின்ன
நாற்றம் மிகுந்து
ஆறடி தூரத்தில்
அருமை சொந்தம்
போகிற போக்கில்
நாலொரு வார்த்தை
அப்போதும் அருகில்
நெஞ்சினை தடவி
வழியும் எச்சிலை
வலியுடன் துடைத்து
உயிரின் சுவாசம்
உடையும் போது
பொங்கும் அவள்விழி
பூக்கும் கண்ணீரில்
கண்டு கொண்டேன்
காதல் அதுவென்று...!
அன்புடன்
பரமேஸ்வரி
கனவுகள் தேடி
வளையல் குலுங்க
இடையினை வளைத்து
உதட்டின் பிளவில்
உயிரினை உறிஞ்சி
அவள் விரல்நகங்கள்
முதுகினில் வரய
மார்புகள் உரச
மயக்கம் கொண்டு
இளமை வேகத்தில்
இல்லற சுகத்தில்
காமம் மிகுந்து
காதல் அதுவென்றேன்...!
பின்...
வயதுகள் ஏறி
பிணிகள் கண்டு
தசைகள் சுருங்கி
கூடுகள் தெரிய
புழுக்கள் தின்ன
நாற்றம் மிகுந்து
ஆறடி தூரத்தில்
அருமை சொந்தம்
போகிற போக்கில்
நாலொரு வார்த்தை
அப்போதும் அருகில்
நெஞ்சினை தடவி
வழியும் எச்சிலை
வலியுடன் துடைத்து
உயிரின் சுவாசம்
உடையும் போது
பொங்கும் அவள்விழி
பூக்கும் கண்ணீரில்
கண்டு கொண்டேன்
காதல் அதுவென்று...!
அன்புடன்
பரமேஸ்வரி
காதல் நினைவுகள்
உன் அதீத அலட்சியம் தந்த
மிகப் பெரிய வேதனையின் முடிவில்
உறுதியாய்த் தீர்மானித்தேன்
உன்னை மறந்து விடுவதென்று!
உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழைத்துக் கொண்டு கிளம்பினேன்
திரையரங்கில்.....
நூலகத்தில்....
புத்தக இடுக்கில்....
பேருந்தில்...
சித்தி வீட்டில்....
அழுது வடிந்த
ஒரு மெகா சீரியலில்...
அலுவலகத்தில்...
சாலையில் பார்த்த
குழந்தையின் முகத்தில்....
எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து மீண்டும்
வீட்டிற்குத் திரும்பினேன்.
செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது...
உன் நினைவுகளைக்
காணவில்லை.
மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்
அலைந்த களைப்பில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!
மிகப் பெரிய வேதனையின் முடிவில்
உறுதியாய்த் தீர்மானித்தேன்
உன்னை மறந்து விடுவதென்று!
உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழைத்துக் கொண்டு கிளம்பினேன்
திரையரங்கில்.....
நூலகத்தில்....
புத்தக இடுக்கில்....
பேருந்தில்...
சித்தி வீட்டில்....
அழுது வடிந்த
ஒரு மெகா சீரியலில்...
அலுவலகத்தில்...
சாலையில் பார்த்த
குழந்தையின் முகத்தில்....
எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து மீண்டும்
வீட்டிற்குத் திரும்பினேன்.
செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது...
உன் நினைவுகளைக்
காணவில்லை.
மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்
அலைந்த களைப்பில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!
காதல்
தினமும்
ஒருவேளை என்
கனவிலும்..
இருவேளை என்
கவிதையிலும்..
மூன்று வேளை உன்னை
பார்ப்பதிலும்..
புண்ணியம் அடைகிறது - என்
ஒவ்வொரு நாளும்..
கனலை
விழுங்கிவிட்டு
தலைகால் புரியாமல்
சுற்றும் பூமியைப்போல..
காதலை
விழுங்கிவிட்டு
உன்னையே சுற்றுகிறேன்
ஒவ்வொரு நாளும்
ஒருவேளை என்
கனவிலும்..
இருவேளை என்
கவிதையிலும்..
மூன்று வேளை உன்னை
பார்ப்பதிலும்..
புண்ணியம் அடைகிறது - என்
ஒவ்வொரு நாளும்..
கனலை
விழுங்கிவிட்டு
தலைகால் புரியாமல்
சுற்றும் பூமியைப்போல..
காதலை
விழுங்கிவிட்டு
உன்னையே சுற்றுகிறேன்
ஒவ்வொரு நாளும்
அம்மா
உன் இடுப்பில்
எனைச் சுமந்து நிலாச்சோறு
ஊட்டிய நாட்களில் உன்
பொறுமையின் வலி நான்
உணரவில்லை...
தாவணிப் பருவத்தில் தோழி
வீடுசென்று தாமதமாக திரும்பிய
நாட்களில் உன் அவஸ்தையின் வலி
நான் உணரவில்லை...
கல்லூரிப் பருவத்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி
நான் உணரவில்லை...
மணப்பந்தலில் உன் காலில்
விழுந்தெழுந்த போது என்
உச்சி முகர்ந்த உனது
முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை!
எனைச் சுமந்து நிலாச்சோறு
ஊட்டிய நாட்களில் உன்
பொறுமையின் வலி நான்
உணரவில்லை...
தாவணிப் பருவத்தில் தோழி
வீடுசென்று தாமதமாக திரும்பிய
நாட்களில் உன் அவஸ்தையின் வலி
நான் உணரவில்லை...
கல்லூரிப் பருவத்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி
நான் உணரவில்லை...
மணப்பந்தலில் உன் காலில்
விழுந்தெழுந்த போது என்
உச்சி முகர்ந்த உனது
முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை!
காற்றை விடச் சிறந்தது எதுவுமில்லை!
என் அழுகையின் போது
மடியில் வந்து
தவழ்ந்தது.
கை உயர்த்தி கண்ணீர்
துடைத்தது.
தன் தோளில் என் முகம்
வைத்து
உதறித் திரும்பின பக்கம் எல்லாம்
எனக்கான ஆறுதல் வைத்திருந்தது.
'என்னை விட்டுப் போயேன்' என்று
குமுறிய என் கையாலாகாத்தனம் பற்றி
எந்த விமர்சனமும் இன்றி
மென்மையாய் சொன்னது:
'மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போது
போகிறேன்'
என் நட்புகளில்
காற்றை விடச் சிறந்தது
எதுவுமில்லை!
மடியில் வந்து
தவழ்ந்தது.
கை உயர்த்தி கண்ணீர்
துடைத்தது.
தன் தோளில் என் முகம்
வைத்து
உதறித் திரும்பின பக்கம் எல்லாம்
எனக்கான ஆறுதல் வைத்திருந்தது.
'என்னை விட்டுப் போயேன்' என்று
குமுறிய என் கையாலாகாத்தனம் பற்றி
எந்த விமர்சனமும் இன்றி
மென்மையாய் சொன்னது:
'மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போது
போகிறேன்'
என் நட்புகளில்
காற்றை விடச் சிறந்தது
எதுவுமில்லை!
மகிழ்விக்கக் காத்திருக்கும் பூங்கா.
எத்தனை நெடிய மரங்கள்
எத்தனை சிறிய செடிகள்
அத்தனையும் பசுமை தந்த வரங்கள்
நுரையீரலுக்களிக்கும் உரங்கள்
நடைபழக நடைபழக
அனைத்தும் மறக்கும் தியானநிலை
அக்கணம் சிலிர்க்கும் உளம்
அக்கணம் மலரும் மனம்
மழையோ வெயிலோ
மேல்வானம் சற்றே தெரிந்திட
மரங்கள் இரசிக்கும் உச்சித் தூரிகையால்
அற்புதக் காட்சிகளை வரைந்த வண்ணம்
வாசம் நுகர்ந்தபடி
வண்ணப் பறவைகளைக் கண்டிட
வாகாய் அசைந்திடும்
வாடைக் காற்றை அனுப்பிய வண்ணம்
நடந்திட பாதைகள்
அமர்ந்திட இருக்கைகள்
பசுமைப் புல்வெளிகள்
அழகு மலர்க்காட்சிகள்
நண்பருடன் அளவளாவ
அன்பருடன் அன்பு விளைய
மருத்துவ சிகிச்சை பயனளிக்க
குழந்தைகள் விளையாட
கோபங்கள் போக்க
தாபங்கள் பகிர
நேசங்கள் உணர
நெஞ்சங்கள் நெகிழ
உடற்பயிற்சி செய்ய
பாடங்கள் பயில
எண்ணங்கள் எழுத
மனஅழுத்தங்கள் குறைய
எத்தனை மனிதர்கள்
எத்தனை விதங்களில்
எத்தனை காரணங்களால்
என்றும் வருவர் செல்வர்
இன்று வருபவர் நாளை வருவாரா
இதே நேரம் இதேவிதத்தில்
என்றும் அறிந்திடாது பூங்கா
எனினும்
என்றும் வாசல் விரிய
அவரவர் விரும்பிய வண்ணம்
அவரவர் விரும்பிய எண்ணம்
நிறைவேறும் வண்ணம்
எதையும் எதிர்பாராது
எவரையும் வரவேற்று
மகிழ்விக்கக் காத்திருக்கும்
பூங்கா.
எத்தனை சிறிய செடிகள்
அத்தனையும் பசுமை தந்த வரங்கள்
நுரையீரலுக்களிக்கும் உரங்கள்
நடைபழக நடைபழக
அனைத்தும் மறக்கும் தியானநிலை
அக்கணம் சிலிர்க்கும் உளம்
அக்கணம் மலரும் மனம்
மழையோ வெயிலோ
மேல்வானம் சற்றே தெரிந்திட
மரங்கள் இரசிக்கும் உச்சித் தூரிகையால்
அற்புதக் காட்சிகளை வரைந்த வண்ணம்
வாசம் நுகர்ந்தபடி
வண்ணப் பறவைகளைக் கண்டிட
வாகாய் அசைந்திடும்
வாடைக் காற்றை அனுப்பிய வண்ணம்
நடந்திட பாதைகள்
அமர்ந்திட இருக்கைகள்
பசுமைப் புல்வெளிகள்
அழகு மலர்க்காட்சிகள்
நண்பருடன் அளவளாவ
அன்பருடன் அன்பு விளைய
மருத்துவ சிகிச்சை பயனளிக்க
குழந்தைகள் விளையாட
கோபங்கள் போக்க
தாபங்கள் பகிர
நேசங்கள் உணர
நெஞ்சங்கள் நெகிழ
உடற்பயிற்சி செய்ய
பாடங்கள் பயில
எண்ணங்கள் எழுத
மனஅழுத்தங்கள் குறைய
எத்தனை மனிதர்கள்
எத்தனை விதங்களில்
எத்தனை காரணங்களால்
என்றும் வருவர் செல்வர்
இன்று வருபவர் நாளை வருவாரா
இதே நேரம் இதேவிதத்தில்
என்றும் அறிந்திடாது பூங்கா
எனினும்
என்றும் வாசல் விரிய
அவரவர் விரும்பிய வண்ணம்
அவரவர் விரும்பிய எண்ணம்
நிறைவேறும் வண்ணம்
எதையும் எதிர்பாராது
எவரையும் வரவேற்று
மகிழ்விக்கக் காத்திருக்கும்
பூங்கா.
யாருக்கிங்கே தெரிந்திடும்? / புரிந்திடும்?
அருவியின் சலசலப்பில்
குருவியின் கலகலப்பில்
மறந்திருந்தேன் என்னை நான்!
பிறந்திருந்தேன் புதிதாய் நான்!
கண்ணில் பெருகிய
கண்ணீர் துடைத்து
அண்ணாந்து பார்த்தேன்!
வானம் கூட - என்
மனம் போல் இருட்டியது
சில்லென்று குளிர் காற்றிடைச்
சிலிர்த்திட்டது என் மேனி! வானமோ
சோவென்று மழை கொண்டு
சோகமாய் அழுது விட
கோபமாய் இடியோ
சாபமிட்டுக் கொட்டித் தீர்த்தது!
என் மேனி எங்கும்
வானத்தின் அழுகை!
எனக்கும் வானத்துக்கும்
ஒரே எண்ணம்!
வானத்தைப் பார்த்து
மனதிடை தோன்றிய கேள்வியை
வினவிட்டேன் துணிந்து!
வானமே! உனக்கென்ன கவலை?
வானமோ குமுறிய அழுகையுடன்
சொன்னது பதிலொன்று!
எனக்குத் தான் யாரும் இல்லையே!
பகலவனும் இரவலனும்
எனக்கென்றே நினைத்திருந்தேன் – அவர்களோ
கணப்பொழுதில் சென்றனர்!
தனிமையால் வாடுகின்றேன்!
சோகமாய் அழுகின்றேன்
சோவென்று மழை கொண்டு - என்று
சொன்னதொரு பதிலொன்று!
ஒன்று மட்டும்
தோன்றியது என் நெஞ்சில்!
எல்லாம் கொண்ட இயற்கை கூட
இல்லாமை கண்டிங்கே வாடும் போது
இல்லை என்றே சொல்லும்
இந்த மனிதர் குலம்
மகிழ்வதெப்போ?
மழையுடன் என் கண்ணீரும்
எல்லாமே தண்ணீராய் - இதனிடை
என் அழுகையும்
வானின் அழுகையும்
யாருக்கிங்கே தெரிந்திடும்?
பாருக்கெங்கே புரிந்திடும்?
குருவியின் கலகலப்பில்
மறந்திருந்தேன் என்னை நான்!
பிறந்திருந்தேன் புதிதாய் நான்!
கண்ணில் பெருகிய
கண்ணீர் துடைத்து
அண்ணாந்து பார்த்தேன்!
வானம் கூட - என்
மனம் போல் இருட்டியது
சில்லென்று குளிர் காற்றிடைச்
சிலிர்த்திட்டது என் மேனி! வானமோ
சோவென்று மழை கொண்டு
சோகமாய் அழுது விட
கோபமாய் இடியோ
சாபமிட்டுக் கொட்டித் தீர்த்தது!
என் மேனி எங்கும்
வானத்தின் அழுகை!
எனக்கும் வானத்துக்கும்
ஒரே எண்ணம்!
வானத்தைப் பார்த்து
மனதிடை தோன்றிய கேள்வியை
வினவிட்டேன் துணிந்து!
வானமே! உனக்கென்ன கவலை?
வானமோ குமுறிய அழுகையுடன்
சொன்னது பதிலொன்று!
எனக்குத் தான் யாரும் இல்லையே!
பகலவனும் இரவலனும்
எனக்கென்றே நினைத்திருந்தேன் – அவர்களோ
கணப்பொழுதில் சென்றனர்!
தனிமையால் வாடுகின்றேன்!
சோகமாய் அழுகின்றேன்
சோவென்று மழை கொண்டு - என்று
சொன்னதொரு பதிலொன்று!
ஒன்று மட்டும்
தோன்றியது என் நெஞ்சில்!
எல்லாம் கொண்ட இயற்கை கூட
இல்லாமை கண்டிங்கே வாடும் போது
இல்லை என்றே சொல்லும்
இந்த மனிதர் குலம்
மகிழ்வதெப்போ?
மழையுடன் என் கண்ணீரும்
எல்லாமே தண்ணீராய் - இதனிடை
என் அழுகையும்
வானின் அழுகையும்
யாருக்கிங்கே தெரிந்திடும்?
பாருக்கெங்கே புரிந்திடும்?
சுற்றிலும் உன் பாதச் சுவடுகள்..!
காலையில் எழுந்தவுடன்
எல்லோரும்
சூரியனை நமஸ்காரம்
செய்கிறார்கள்
சூரியன் மட்டும்
உன்னையும்,
உன் கோலத்தையும்,
நமஸ்காரம் செய்கிறது..!
உன் வீட்டில்
யாருமில்லா நேரம்
நீ போட்டு வைத்த
கோலமும், நானும்,
தனிமையில். .
வெள்ளைக் கோலப்பொடியை
உன் சிரிப்பிலிருந்துதான்
தயாரிக்கிறார்களா?
கோலம் போடும் போது
வித விதமாய் வெட்கப்படுவாயா?
ஒவ்வொரு வர்ணப்பொடிகளிலும்
துல்லியமாய்த் தெரிகிறது
உன் வெட்கம்..!
கோலத்தின் அழகிற்குப்
போட்டியாக
சுற்றிலும் உன் பாதச் சுவடுகள்..!
எல்லோரும்
சூரியனை நமஸ்காரம்
செய்கிறார்கள்
சூரியன் மட்டும்
உன்னையும்,
உன் கோலத்தையும்,
நமஸ்காரம் செய்கிறது..!
உன் வீட்டில்
யாருமில்லா நேரம்
நீ போட்டு வைத்த
கோலமும், நானும்,
தனிமையில். .
வெள்ளைக் கோலப்பொடியை
உன் சிரிப்பிலிருந்துதான்
தயாரிக்கிறார்களா?
கோலம் போடும் போது
வித விதமாய் வெட்கப்படுவாயா?
ஒவ்வொரு வர்ணப்பொடிகளிலும்
துல்லியமாய்த் தெரிகிறது
உன் வெட்கம்..!
கோலத்தின் அழகிற்குப்
போட்டியாக
சுற்றிலும் உன் பாதச் சுவடுகள்..!
உடனே சொல்லித் திருத்திடு!
வீங்கிப் புண்ணான கழுத்தோடு
விளக்கிச் சொல்ல வாயின்றி
ஓட்டுபவனின் உதைக்குப் பயந்து
ஓட்டமாய் வண்டி இழுத்துச் செல்லும்
ஒற்றை மாடு...
தன்னைப்பெற்ற ஏழைக் கூலித் தாயோ
தரிசு நிலத்திலே பசுவுக்குப் புல் பிடுங்க
பசியால் துடிதுடிக்கும் பத்துமாதத் தங்கையை
பாதி இடுப்பிலே தூக்கிச் சுமக்கும்
பாவாடை கிழிந்த மூன்று வயது அக்கா...
பச்சைப் பசேல் காட்டுக்குள்ளே
பாடிப் பறக்க முடியாமல்
வெட்டப்பட்ட சிறகுகளுடன்
பெட்டிக்குள் அடைக்கப்பட்ட
பச்சைக்கிளி...
பத்து மாதம் சுமந்து பெற்ற
பச்சைக் குழந்தையை
கால் வயிற்றுக் கஞ்சிக்காக
கால் காசுக்கு விற்றிட்ட
ஏழைத்தாய்...
என் கண்ணில் பட்டவற்றை
எழுதாமல் இருந்திடவோ
என்னால் இயலவில்லை
உன் கண்ணில் எதிர்ப்பட்டால்
உன் நண்பன் கிளி வளர்த்தால்
உடனே சொல்லித் திருத்திடு!
விளக்கிச் சொல்ல வாயின்றி
ஓட்டுபவனின் உதைக்குப் பயந்து
ஓட்டமாய் வண்டி இழுத்துச் செல்லும்
ஒற்றை மாடு...
தன்னைப்பெற்ற ஏழைக் கூலித் தாயோ
தரிசு நிலத்திலே பசுவுக்குப் புல் பிடுங்க
பசியால் துடிதுடிக்கும் பத்துமாதத் தங்கையை
பாதி இடுப்பிலே தூக்கிச் சுமக்கும்
பாவாடை கிழிந்த மூன்று வயது அக்கா...
பச்சைப் பசேல் காட்டுக்குள்ளே
பாடிப் பறக்க முடியாமல்
வெட்டப்பட்ட சிறகுகளுடன்
பெட்டிக்குள் அடைக்கப்பட்ட
பச்சைக்கிளி...
பத்து மாதம் சுமந்து பெற்ற
பச்சைக் குழந்தையை
கால் வயிற்றுக் கஞ்சிக்காக
கால் காசுக்கு விற்றிட்ட
ஏழைத்தாய்...
என் கண்ணில் பட்டவற்றை
எழுதாமல் இருந்திடவோ
என்னால் இயலவில்லை
உன் கண்ணில் எதிர்ப்பட்டால்
உன் நண்பன் கிளி வளர்த்தால்
உடனே சொல்லித் திருத்திடு!
மழைத் துளிகள் ஒவ்வொன்றும்
மழைத் துளிகள் ஒவ்வொன்றும்
உன் பார்வை என்றிருந்தால்...
மழையில் நாள் தோறும்
நனயச் சம்மதம்....
என் கனவுகள் தோறும்
நீ வருவாய் என்றிருந்தால்...
கண்களை மூடிக் கொண்டு
நாள் தோறும் தூங்கச் சம்மதம்....
காற்றாக நான் இருந்து
உன் மூச்சில் கலப்பதென்றால்...
நில்லாது அலைகின்ற
காற்றாகச் சம்மதம்...
நிழலாக உனக்கு
நான் இருக்க முடியும் என்றால்...
நிலத்தோடு தேய்கின்ற
நிழலாகச் சம்மதம்....
உன் பார்வை என்றிருந்தால்...
மழையில் நாள் தோறும்
நனயச் சம்மதம்....
என் கனவுகள் தோறும்
நீ வருவாய் என்றிருந்தால்...
கண்களை மூடிக் கொண்டு
நாள் தோறும் தூங்கச் சம்மதம்....
காற்றாக நான் இருந்து
உன் மூச்சில் கலப்பதென்றால்...
நில்லாது அலைகின்ற
காற்றாகச் சம்மதம்...
நிழலாக உனக்கு
நான் இருக்க முடியும் என்றால்...
நிலத்தோடு தேய்கின்ற
நிழலாகச் சம்மதம்....
Subscribe to:
Comments (Atom)
