உன் இடுப்பில்
எனைச் சுமந்து நிலாச்சோறு
ஊட்டிய நாட்களில் உன்
பொறுமையின் வலி நான்
உணரவில்லை...
தாவணிப் பருவத்தில் தோழி
வீடுசென்று தாமதமாக திரும்பிய
நாட்களில் உன் அவஸ்தையின் வலி
நான் உணரவில்லை...
கல்லூரிப் பருவத்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி
நான் உணரவில்லை...
மணப்பந்தலில் உன் காலில்
விழுந்தெழுந்த போது என்
உச்சி முகர்ந்த உனது
முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here