நாம் ஏன் இப்படி
இருக்கிறோம்
சதா முணுமுணுத்துக்கொண்டு
எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு
எதையாவது சுத்தம் செய்துகொண்டு
யாரையாவது சபித்துக்கொண்டு
எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு
எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு
எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு
ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு
தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு
யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு
ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு
கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு
நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு
நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு
கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு
மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று எப்போதும் யோசித்துக்கொண்டு
பொறுக்கிகளுக்குப் பயந்துகொண்டு
புகழுள்ள மனிதர்களை அனாவசியமாய்த் தெரிந்துகொண்டு
சதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு
எப்போதும் பருவநிலையினைப் பற்றி புகார் செய்துகொண்டு
சிறிய வருமானத்திற்கான சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு
அதிர்ஷ்டத்தின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு
யாருடைய சாவுக்காவது காத்துக்கொண்டு
நமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு
முட்டாள்களின் கவிதையைப் படித்துக்கொண்டு
குடிக்கும்போது அழுதுகொண்டு
புணர்ச்சியில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு
அடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு
சிறுவர்களையும் சிறுமிகளையும் ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டு
பௌர்ணமி தினங்களில் மனம் உடைந்து அழுதுகொண்டு
எதையாவது தொலைத்துக்கொண்டு
எதையாவது தேடிக்கொண்டு
தவறான முடிவுகளுக்காக வருந்திக்கொண்டு
தவறிப்போன சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக்கொண்டு
யாருடைய அன்புக்காகவாவது ஏங்கிக்கொண்டு
யாரையாவது இணங்கச் செய்துகொண்டு
கடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு
சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு
பிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு
தன் வழியே போகும் எறும்புகளை நசுக்கி அழித்துக்கொண்டு
கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு
போலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு
எதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய் திட்டமிட்டுக்கொண்டு
தூக்க மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு
மற்றவர்களின் கடமைகளை நினைவூட்டிக்கொண்டு
நமது இயலாமையை மறைக்க யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு
பூனைகளுக்கு உணவுதர மறுத்துக்கொண்டு
யாரையாவது இறுகப் பற்றிக்கொண்டு
உடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு
மலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு
யாருடைய உள்ளாடையையோ திருடி முகர்ந்துகொண்டு
பொது அறிவை வளர்த்துக்கொண்டு
எதற்காவது பயன்படுமென்று எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு
சொற்பொழிவுகளில் கைதட்டிக்கொண்டு
நிழல்களுக்குப் பயந்துகொண்டு
எப்போதும் யாரையாவது கண்காணித்துக்கொண்டு
உடல் பயிற்சியினால் மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு
எளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை நிரூபித்துக்கொண்டு
தங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு
அவமதிப்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க கற்றுக்கொண்டு
புகைப்படங்களைப் பாதுகாத்துக்கொண்டு
திறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு
வேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு
நம் பால்யத்தை நினைவுகூர்ந்துகொண்டு
ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு
வேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு
யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு
எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு
எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு
எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு
சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு
மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு
நாம் ஏன்
இப்படி இருக்கிறோம்
Friday, July 16, 2010
கொஞ்சம் சிரிக்கலாமே!!!!!
1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....
2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...
3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....
11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)
12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?
16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...
17) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
18) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++
19) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!

உண்மையின் தத்துவம் .............................
* பணமும், வசதி வாய்ப்புகளும் வந்து போகக்கூடியவை. மனித சமூகம் செல்வத்தை தேடி ஓடிக் கொண்டு இருக்கிறது. வாழ்க்கை பொருளுடையதாக இருக்கவேண்டுமானால், பொருள் தேடுவதோடு அருளையும் தேட வேண்டும்.
* சுயநலமற்ற சேவை மட்டுமே மனசாந்தியைத் தரவல்லது. நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை சேவை வெளிக்கொணர்ந்து விடும் ஆற்றல் கொண்டது.
* தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்குமானால், முதலில் தொண்டனாக சேவை செய்யும் அனுபவத்தைப் பெறவேண்டும்.
* எவன் ஒருவன் சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக எண்ணுகிறானோ அவனே வாழ்வின் உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
* கடந்த காலம் திரும்புவதில்லை. வருங்காலம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. நிகழ்காலத்தை நல்ல முறையில் கழிப்பதே அறிவாளியின் செயல்.
* பிறக்கும்போது ஆபரணங்களுடன் பிறப்பதில்லை. ஆனால், முற்பிறவியில் செய்த செயல்களின் வினைப்பயனை அணிந்து கொண்டு வருகிறோம். யாராக இருந்தாலும் இதில் தப்ப முடியாது.

கவிதை - காதலெனும்...
* காதலெனும்
கடலில் விழுந்து
மூர்ச்சையாகி
மூழ்கிப் போனோர் பலர்...
* காதலெனும்
காட்டாற்றில் சிக்கி
சின்னா பின்னமாகி
கரை ஒதுங்கியோர் பலர்...
* காதலெனும்
காந்தர்வ மலையேறி
திக்கு திசை தெரியாமல்
காணாமல் போனோர் பலர்...
* காதலெனும்
காளவாய்க்குள் விழுந்து
கரிக்கட்டையாய்
வெந்து போனோர் பலர்...
* காதலெனும்
புதைகுழிக்குள் விழுந்து
உயிருடன்
புதைந்து போனோர் பலர்...
* காதலெனும்
சாக்கடைக்குள் விழுந்து
சகதியில் மூழ்கி
சமாதியானோர் பலர்...
* ஒரு வழிப்பாதையில்
சென்ற பலர்
மாண்டதாக
வரலாறு உண்டு...
மீண்டதாக
சரித்திரம் இல்லை...
* காதலெனும்
மாய உலகத்தின்
முன்புறம்-
பூவாடை வீசும்
பூங்காவனம்...
மனதை மயக்கும்
மயங்கி விடாதீர்கள்...
* பின்புறமோ...
பிணவாடை வீசும்
கல்லறைத் தோட்டம்...!
கடலில் விழுந்து
மூர்ச்சையாகி
மூழ்கிப் போனோர் பலர்...
* காதலெனும்
காட்டாற்றில் சிக்கி
சின்னா பின்னமாகி
கரை ஒதுங்கியோர் பலர்...
* காதலெனும்
காந்தர்வ மலையேறி
திக்கு திசை தெரியாமல்
காணாமல் போனோர் பலர்...
* காதலெனும்
காளவாய்க்குள் விழுந்து
கரிக்கட்டையாய்
வெந்து போனோர் பலர்...
* காதலெனும்
புதைகுழிக்குள் விழுந்து
உயிருடன்
புதைந்து போனோர் பலர்...
* காதலெனும்
சாக்கடைக்குள் விழுந்து
சகதியில் மூழ்கி
சமாதியானோர் பலர்...
* ஒரு வழிப்பாதையில்
சென்ற பலர்
மாண்டதாக
வரலாறு உண்டு...
மீண்டதாக
சரித்திரம் இல்லை...
* காதலெனும்
மாய உலகத்தின்
முன்புறம்-
பூவாடை வீசும்
பூங்காவனம்...
மனதை மயக்கும்
மயங்கி விடாதீர்கள்...
* பின்புறமோ...
பிணவாடை வீசும்
கல்லறைத் தோட்டம்...!
Subscribe to:
Comments (Atom)