Rank

My Popularity (by popuri.us)

Vazhga Tamil

Wednesday, April 21, 2010

பெய்து கொண்டிருக்கிறது மழை

பெய்து கொண்டிருக்கிறது
சிலர் நனைகின்றோம்
பலர் நகர்கின்றோம்
எல்லையில்லாத்
தேவைகளைக் கூட்டியதால்
தேடலில் தொலைகின்றோம்...

தன்னிடம் கிடைப்பதை
விட்டுவிட்டு
தானையமாய் திரிவதில்
நாம் தீவிரவாதிகள்...

சுயநலம் என்பது
நமக்கு
மற்றவர்களோடு அல்ல
நம்மிடமே...

அனைத்தையும்
ஆசைக்கு அடகுவைத்து விட்டு
அந்த அனைத்திலும்
நம்மை மீட்கத் தவறுகிறோம்...

சின்னச் சின்ன அறிவுகளில்
சிறைப்படும் நம்மால்
சம்பூரண அறிவு பெற்று
விடுதலையாகத்
தெரியவில்லை
பெய்வது
ஞானமழை
பரமேஸ்வரிகுத் தேவையில்லை
குடை...!

அன்புள்ள அப்பாவிற்கு

அன்புள்ள அப்பாவிற்கு
என்னுள்
காதல்புகுந்துவிட்டதெனக்கூறி
கவலையுற்றதாக
அம்மா கூறினார்.
தண்டிப்பதும்,
கண்டிப்பதுமே
பாசமென்று
தப்பாக நினைத்திருக்கும்
தந்தையே!
மனம் திறந்து எழுதுகிறேன்
மடலை - ஒரு
தோழனைப்போல்
தொடர்ந்து வாசிக்கவும்.
உண்மையென்பதை-முதலில்
ஒப்புக்கொள்கிறேன்.
கந்தகத்தோடு
விளையாடப்போவதாய்
கவலையுறவேண்டாம்!
காதலென்ன
போர்க்குணமா
புறக்கணிப்பதற்கு?
பூக்களம்தானே!
புல்லாங்குழலுக்குள்
புகுந்த காற்றாய்
காதல் என்னை
புதுப்பித்துள்ளது.
உங்களைப் பார்ப்பதையே
தவிர்த்துவந்த எனக்கு
இப்போதெல்லாம்
உங்கள்
தோள்மீது துயிலவேண்டுமென்று
தோன்றுகிறது.
பூ வேண்டி மட்டுமே
ரோஜாச்செடியிடம்
சென்றுவந்த நான்
இப்போதெல்லாம்
உடைந்த சட்டியில்
செடி உட்கார்ந்திருக்கும்
அழகையும்
ரசிக்கிறேன்.
அன்றாட
சுய தேவைகளை
ஆற்றவே
சோம்பேறிய நான்
சில சிகரம் தொடும்
சிரத்தையோடு இன்று
உடையில்
நடையில்
செயலில்
தனித்துவத்தை-எனக்கு
தயார்படுத்தித் தந்தது
காதல்.
கவிதை வாசிக்க
காற்றை ருசிக்க
ஓவியம் ரசிக்க
வானத்தில் வசிக்க
சிறகின்றி பறக்க
சரிந்துகிடக்கும்
சமூகத்தைச் சரிசெய்ய
கற்றுகொடுத்தது
காதல்.
அம்மா உங்களை
அறிமுகம் செய்திருந்தாலும்,
காதல்தான்
உங்களின்
உள்ளூர அர்த்தத்தை
உணர்த்தியது.
என்னுள்
காதல் நுழைந்து
எல்லோரையும்
எல்லாவற்றையும்
நேசிக்க வைத்தது.
காதல்
வாழ்க்கைக்கான
சூத்திரமென்றே
எனக்குத்தோன்றுகிறது.
பணத்தோடு
பகை வந்துவிடக்கூடாதென்று
சந்தோஷத்தோடு
சண்டையிட்டுக்கொண்டிருக்கும்
உங்களுக்கு
ஒரே ஒரு வேண்டுகோள்.
மனதுக்குள்
காதலை அனுமதியுங்கள்
அம்மா அப்போது
தேவதையாகத் தெரிவார்
நான்
தோழியாகத் தெரிவேன்!
ஒரு மகளாய்
எழுதுவது மிகைதான்,
தோழியாய்க் கூறுகிறேன்
காதல்
தேவை உங்களுக்கு....

அன்புடன்

அன்புள்ள அப்பாவிற்கு

அன்புள்ள அப்பாவிற்கு
என்னுள்
காதல்புகுந்துவிட்டதெனக்கூறி
கவலையுற்றதாக
அம்மா கூறினார்.
தண்டிப்பதும்,
கண்டிப்பதுமே
பாசமென்று
தப்பாக நினைத்திருக்கும்
தந்தையே!
மனம் திறந்து எழுதுகிறேன்
மடலை - ஒரு
தோழனைப்போல்
தொடர்ந்து வாசிக்கவும்.
உண்மையென்பதை-முதலில்
ஒப்புக்கொள்கிறேன்.
கந்தகத்தோடு
விளையாடப்போவதாய்
கவலையுறவேண்டாம்!
காதலென்ன
போர்க்குணமா
புறக்கணிப்பதற்கு?
பூக்களம்தானே!
புல்லாங்குழலுக்குள்
புகுந்த காற்றாய்
காதல் என்னை
புதுப்பித்துள்ளது.
உங்களைப் பார்ப்பதையே
தவிர்த்துவந்த எனக்கு
இப்போதெல்லாம்
உங்கள்
தோள்மீது துயிலவேண்டுமென்று
தோன்றுகிறது.
பூ வேண்டி மட்டுமே
ரோஜாச்செடியிடம்
சென்றுவந்த நான்
இப்போதெல்லாம்
உடைந்த சட்டியில்
செடி உட்கார்ந்திருக்கும்
அழகையும்
ரசிக்கிறேன்.
அன்றாட
சுய தேவைகளை
ஆற்றவே
சோம்பேறிய நான்
சில சிகரம் தொடும்
சிரத்தையோடு இன்று
உடையில்
நடையில்
செயலில்
தனித்துவத்தை-எனக்கு
தயார்படுத்தித் தந்தது
காதல்.
கவிதை வாசிக்க
காற்றை ருசிக்க
ஓவியம் ரசிக்க
வானத்தில் வசிக்க
சிறகின்றி பறக்க
சரிந்துகிடக்கும்
சமூகத்தைச் சரிசெய்ய
கற்றுகொடுத்தது
காதல்.
அம்மா உங்களை
அறிமுகம் செய்திருந்தாலும்,
காதல்தான்
உங்களின்
உள்ளூர அர்த்தத்தை
உணர்த்தியது.
என்னுள்
காதல் நுழைந்து
எல்லோரையும்
எல்லாவற்றையும்
நேசிக்க வைத்தது.
காதல்
வாழ்க்கைக்கான
சூத்திரமென்றே
எனக்குத்தோன்றுகிறது.
பணத்தோடு
பகை வந்துவிடக்கூடாதென்று
சந்தோஷத்தோடு
சண்டையிட்டுக்கொண்டிருக்கும்
உங்களுக்கு
ஒரே ஒரு வேண்டுகோள்.
மனதுக்குள்
காதலை அனுமதியுங்கள்
அம்மா அப்போது
தேவதையாகத் தெரிவார்
நான்
தோழியாகத் தெரிவேன்!
ஒரு மகளாய்
எழுதுவது மிகைதான்,
தோழியாய்க் கூறுகிறேன்
காதல்
தேவை உங்களுக்கு....

அன்புடன்