என்ன தான்
நீ
ஓடி ஓடிப் போனாலும்,
நின்றுகொண்டேதான்
இருக்கின்றன
உன் சின்னச் சிரிப்பும்,
பெரிய புன்னகையும்!
எவ்வளவு தான்
நீ
மழையில் நனைந்தாலும்,
தெறிப்பதென்னவோ
தீயும்,
கதகதப்பும்தான்!
எவ்வளவு தான்
நீ
மௌனமாய்ச் சென்றாலும்,
பேசிக்கொண்டேதான்
வருகின்றன
உன் கொலுசும்,
விழிகளும்!
என்ன தான்
நீ
காதலை
பயமுறுத்தி பயமுறுத்தி
பதுக்கி வைத்தாலும்,
கசிந்துகொண்டேதான்
இருக்கிறது
என்னைப் பார்த்தால்
வரும் கோபத்திலும்,
இல்லையென்றால்
தேடும் ஏக்கத்திலும்!
எவ்வளவு தான்
நீ
பத்திரமாய்
பாதுகாத்து நடந்தாலும்,
உனக்கும் தெரியாமல்
உதிர்ந்துகொண்டேதான்
வருகிறது
உனது அழகு
கவிஞனின் பேனாவிலும்,
ஓவியனின் தூரிகையிலும்!
அன்புடன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here