வாழை மரம்
கிழிந்த சட்டையுடன்
நிமிர்ந்து நிற்கிறது
வாழை மரம்
கவிஞன்
காலத்தை காகிதத்தில்
கட்டி வைப்பவன்
கவிஞன்
வியர்வை
வறுமையை கழுவ
புறப்படும் நதி
வியர்வை
விரல்கள்
நெம்புகோல் பத்து
உன்னில் உண்டு
விரல்கள்
வயல்கள்
என் காதலியின்
முந்தானை
வயல்கள்
நூலகம்
அனைத்தும் இருந்தும்
வருவோர் குறைவு
நூலகம் .
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here