Rank

My Popularity (by popuri.us)

Vazhga Tamil

Friday, April 16, 2010

வீடெங்கும் தேடிப்பார்த்தேன்...

வீடெங்கும் தேடிப்பார்த்தேன்...
எங்கும் காணோம்...
கவலையோடு...
படுக்கையறைக்கு சென்றேன்...
எப்போதும்... இரவில் என் துணையாகும்...
துயிலும் தூரம் நின்று
எனைப் பார்த்து பார்த்து நகைக்க...
முதன் முதலாய் நடு நிசியையும் பார்த்தேன்..
இமையா கண்களுடன் கடந்தோடுகின்றன
என் இரவின் நாழிகைகள்...
என் முகமெல்லாம் கதிரவன்
தன் ஒளி பாய்ச்ச...
ஏதோ... ஞாபகம் வந்து...
விரைந்தோடி வந்தேன்...
என் தாயின் கட்டளைக்கிணங்க...
நீ அமர்வதெற்கென போட்ட
நாற்காலி இருந்த இடத்தை நோக்கி...
நாற்காலியோ... நீயோ... அங்கில்லை...
என்றாலும்...
நான் இதுவரை
என் வீடெங்கும் தேடி பார்த்தும் கிட்டாத...
எனக்கு முதன்முதலாய்
துயிலா இரவை பரிசளித்த...
இதயம் மட்டும் துடித்து கொண்டிருந்தது...
அவ்விடத்தில் தனியே...
அது நீ தான் என் அன்பே..
அன்புடன்

No comments:

Post a Comment

accepted here